பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை உயர்த்தி ஏஐசிடிஇ பிறப்பித்துள்ள உத்தரவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
ஏஐசிடிஇ வகுத்துள்ள புதிய நெறிமுறைப்படி பொறியியல் கல்லூரிகளில் சேர, பொதுப்பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும், இடஒதுக்கீடு பெறும் பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்களும் பெறவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பட்டியலினம், பழங்குடியினர் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள். ஏற்கெனவே சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள அவர்களை முன்னேற விடாமல் கீழே தள்ளும் நோக்கத்துடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
அடித்தட்டு மக்களின் நலனுக்கு எதிரான இந்த ஆணை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். தமிழக மாணவர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஏற்கெனவே நடைமுறையில் உள்ள குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தொடரும் என்று அறிவித்ததற்காக தமிழக முதல்வருக்கு நன்றி. மேலும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக