சட்டசபை தேர்தலில் பா.ம.க. 30 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சென்னையில் வேளச்சேரி தொகுதியை போராடி பெற்று பா.ம.க. போட்டியிட்டது. புறநகரில் மதுரவாயல், கும்மிடிப்பூண்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் அனைத்து தொகுதிகளிலும் பா.ம.க. குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பைச் இழந்தது.
சென்னையில் பா.ம.க. வுக்கு 17 கவுன்சிலர்கள் உள்ளனர். வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்ட ஜெயராமன் அந்த மண்டல குழு தலைவராக பணியாற்றியவர். அப்படியிருந்தும் பா.ம.க. வெற்றி பெறாதது ஏன் என்பது பற்றி பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினார்கள். கட்சி ஓட்டும், கூட்டணி கட்சி ஓட்டுகளும் சிதறாமல் விழுந்துள்ளது. ஆனால் தி.மு.க. ஆட்சி மீதான வெறுப்பு அலையால்தான் பா.ம.க. தோல்வி அடைந்ததாக நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். இன்று சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எம்.எம்.டி.ஏ. காலனியில் மாலையில் நடக்கிறது. கூட்டத்துக்கு ஏ.கே.மூர்த்தி தலைமை தாங்குகிறார். மாவட்ட செயலாளர்கள் ரமேஷ், கன்னியப்பன், பாண்டியன், ஜமுனா, சேகர், சீமான் இளங்கோ, சத்யா, ஏழுமலை மற்றும் 16 பகுதி செயலாளர்கள், 155 வட்ட செயலாளர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் பா.ம.க. தோல்விக்கான காரணம்? வர இருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தலை சந்திப்பது? கட்சியின் வளர்ச்சி பற்றி ஆலோசிக்கிறார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக