மூத்த பத்திரிக்கையாளர் திரு,சின்னக்குத்தூசி எ) இரா.தியாரகராஜன் அவர்கள் 22.5.2011 அன்று காலை 7.50 மணிக்கு சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 77.
திரு,சின்னக்குத்துர்சி(எ) இரா.தியாரகராஜன் அவர்கள் மறைவையொட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
முதுபெரும் பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான சின்னக்குத்தூசி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
சின்னக்குத்தூசி பத்திரிகை உலகில் பல்வேறு முத்திரைகளை பதித்தவர். அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் படைத்தவர். ஒரு பத்திரிகையாளர் பொதுவாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுராதரணமாய் திகழ்ந்தவர். திமுக தலைவர் கலைஞருக்கு உற்ற துணையாய் இருந்தவர். அவரது திடீர் மறைவு கலைஞர் அவர்களுக்கும், பத்திரிகை உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவால் வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ராமதாஸ் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக