சென்னை:
தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை வலியுறுத்தி பாமக சார்பில் வரும் 20-ம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
ஒன்றாம் வகுப்புக்கும் ஆறாம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தும்போது, அதை மற்ற வகுப்புகளுக்கும் நீடிப்பதற்கு தடை எதுவும் இருக்க முடியாது. கடந்த ஆண்டு 1 மற்றும் 6-ம் வகுப்பில் சமச்சீர் கல்வித்திட்டத்தில் படித்த மாணவர்கள் தற்போதைய கல்வியாண்டில் வேறு பாடத்திட்டத்தில் படிக்க நேர்ந்தால் அவர்களுக்கு தேவையற்ற சிரமங்கள் ஏற்படும். எனவே, தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதிகள் மூலமாக இக்கருத்தை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி பாமக சார்பில் வரும் 20-ம் தேதி காலை 10 மணியளவில், சென்னை நினைவரங்கம் அருகே எனது தலைமையில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக