கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் அரசியலில் காணாமல் போய்விடுவார்கள் என்று பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. கலிவரதன் கூறினார்.
முகையூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பா.ம.க. மாவட்ட செயலாளருமான வி.ஏ.டி.கலிவரதன் கூறியது:
தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்த பாடுபட்டு வருகின்றது. அல்லல்படும் அடித்தட்டு மக்களை சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் டாக்டர் ராமதாஸ் அல்லும் பகலும் அரும்பாடு பட்டு வருகின்றார். வரும் காலங்களில் தமிழகம் எப்படி இருக்க வேண்டும், எதிர் கால இளைஞர் சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியே சிந்தித்து அதற்கான திட்டங்களை தயாரித்து அதனை செயல் படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பட்டி தொட்டியில் கிடக்கும் கடைகோடி தமிழனையும் சந்தித்து பேசியதன் பயனாக இன்று பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தின் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது.
இந்த வளர்ச்சி டாக்டர் ராமதாசின் கொள்கைக்கும், அவர் வழிதோன்றலான டாக்டர் அன்புமணி ராமதாசின் உழைப்பிற்கும் கிடைத்திட்ட பரிசே ஆகும். ஆனால் சிலர் ஏதோ தன்னால்தான் இந்த பா.ம.க. வளர்ந்து விட்டது போல் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். அதே போல் இடஒதுக்கீட்டுக்கு டாக்டர் ராமதாஸ் தியாகம் வரலாற்றில் பொன்னேட்டில் பதிக்கும் நிலையில் உள்ளது. இதன் மூலம் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உரிய இட ஒதுக்கீட்டை பெற்ற பாட்டாளி சமுதாயம் டாக்டர் ராமதாசை மதித்து வருகின்றனர். நிலைமை இப்படி இருக்க டாக்டர் ராமதாசால் பதவி சுகம் அனுபவித்து விட்டு தற்போது பதவி இல்லை என்றதும், கட்சி தலைமைக்கு எதிராக செயல்படுவது துரோகம் ஆகும். இதுபோன்ற துரோகிகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
இதுவரை இந்த கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் எவரும் தமிழக அரசியலில் நிலைக்க முடியவில்லை. இதுதான் வரலாற்று உண்மை என்றார்.
1 கருத்துகள்:
sariyana thamasu
கருத்துரையிடுக