புகையிலைப் பொருட்களுக்கு வரி உயர்வு : பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்பு

     வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்' என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை

              முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பொறுப்பேற்ற 2-வது மாதத்திலேயே ரூ.4,200 கோடி அளவுக்கு புதிய வரிச் சுமைகளை மக்களின் தலையில் சுமத்தியிருக்கிறார். வேளாண் பயன்பாட்டிற்கான உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த மதிப்புக் கூட்டுவரி ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கப்படவேண்டிய ஒன்று.

           அதேபோல் பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு அளிக்கப்பட்டு வந்த வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டு அவற்றுக்கு 20 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டிருக்கிறது, அதுவும் வரவேற்கத்தக்கது. ஆனால் துணி வகைகள், சமையல் எண்ணெய் உட்பட பொதுமக்கள் பயன்படுத்தும் பல்வேறு வகையான பொருட்களின் மீதான வரி உயர்த்தப்பட்டிருப்பது ஏழை எளிய மக்களை பெரிதும் பாதிக்கும்.  

            மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பெருமளவில் உயர்ந்துள்ளன. இந்த நிலையில் மாநில அரசும் வரிகளை உயர்த்தினால் ஏழை எளிய மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது. 3 வாரங்களில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், வரி உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும். எனவே தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மக்களை பாதிக்கும் வரி உயர்வை ரத்து செய்யவேண்டும். இன்னொருபுறம் மது வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

              தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், தமிழக அரசோ மது விற்பனையை இன்னும் பணம் காய்க்கும் மரமாகக் கருதிக் கொண்டிருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

2 கருத்துகள்:

dakaraidakila சொன்னது…

லஞ்சம் கொடுத்தால் தான் இன்று எதுவும் நடைபெறுகிறது. ஒரு மின் இணைப்பு கிடைக்க ரூபாய் 500 கொடுக்கணும். இது போல வீடு கட்ட தேவையான ப்ளூ பிரிண்ட் வாங்க அனைத்து அதிகாரிக்கும் லஞ்சம் கொடுக்கணும். இது போல பட்டா பெயர் மாறுதலுக்கு கிராம நிர்வாக அலுவலரை அணுகினால் லஞ்சம் கொடுக்கணும். வீட்டு வரி செலுத்த பேரூராட்சி சென்றால் அங்கே லஞ்சம் கொடுத்தால் தான் வீட்டு வரி கட்ட முடியும். பத்திர ஆபிசில் EC சர்டிபிகட் வாங்க லஞ்சம். முதலில் இதை ஒழிக்கணும். இதே போல் அனைத்து அரசு அலுவகங்களிலும் லஞ்சம் கொடுத்தால் தான் மக்களுக்கு காரியம் நடக்குது. இதை ஒழிக்கணும்