ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம்: ஏ.கே.மூர்த்தி தலைமை தாங்கினார்




http://www.dailythanthi.com/images/news/20110718/pmk.jpg

சென்னை:

                 ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் தியாகராய நகரில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் ஜெயராமன் வரவேற்று பேசினார். அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றினார்.

           கூட்டத்தில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, மாவட்ட செயலாளர்கள் ரமேஷ், ராம.கண்ணியப்பன், ஏழுமலை, ஜமுனா கேசவன், வி.கே.சேகர், வி.கே.பாண்டியன், வண்ணை சத்யா, சீமான், இளங்கோவன், ஆனந்தன், வக்கீல் பாலு, ரமணி, ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

       "வர இருக்கிற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் குறைந்தது 75 வார்டுகளில் போட்டியிட்டு வார்டுகளை தேர்வு செய்து கட்சி பணிகளை வேகப் படுத்துவது.

       பா.ம.க. இளைஞர் சங்கத்தை வலுப்படுத்த ஒவ்வொரு தொகுதியிலும் 25 வயதுக்குட்பட்ட 10-ம் வகுப்பு தேறிய 500 பேரை உறுப்பினராக சேர்ப்பது.   

        தேர்தலில் அரசியல் கட்சிகள் பணம் செலவழிப் பதை தடுக்க “அரசியல் கட்சிகளும் தேர்தல் செலவுகளும்” என்ற தலைப்பில் மாவட்டம் வாரியாக கருத்தரங்கம் நடத்துவது.

       முதல் கருத்தரங்கம் 24-ந் தேதி வேளச்சேரியில் நடக்கிறது. டாக்டர் ராமதாஸ் பேசுகிறார். 

         வருகிற 25-ந் தேதி பசுமை தாயகம் சார்பில் விபத்து தடுப்பு பற்றிய விழிப்புணர்வு மனித சங்கிலியை மெரினா கடற்கரையில் நடத்துவது.’’ 

1 கருத்துகள்:

dakaraidakila சொன்னது…

திமுக + காங்கிரஸ் + பாமக + விசி கூட்டணி வெற்றி கூட்டணி, சரித்திர கூட்டணி. இது உள்ளாட்சி தேர்தலிலும் இருந்ததால் தான் சவால்களை வெற்றி பெற செய்ய முடியும். மக்கள் நலனுக்காகவே பாமக தொடர்ந்து போராடுகிறது. திமுகவின் பொற்கால ஆட்சி, பாமகவின் மக்கள் நலனுக்காகவும் , உரிமைக்காகவும் , அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் செய்த போராட்டங்கள் சரித்திர கல்வெட்டுகள். டாக்டர் கலைஞர் + டாக்டர் அய்யா எப்போதும் இரட்டை குழல் துப்பாக்கி போல் செயல்பட்டு மீண்டும் ஆட்சியை பிடிக்கணும். அப்போதுதான் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமை ஓங்கும். அரசியல் தியாகிகளான இந்த இரண்டு டாக்டரும் தான் தமிழ்நாட்டின் பிற்பட்ட , தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் இரு கண்கள். மக்கள் மனதில் நீங்க இடம் பெற்றுள்ள இந்த டாக்டர்கள் பல்லாண்டு வாழ்க.