காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பாமக இளைஞர் சங்கச் செயல் வீரர்கள் கூட்டம்

காஞ்சிபுரம்:

               தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பாமகவுக்கு ஏற்பட்ட தோல்வி நிரந்தரமானதல்ல என்று பாமக மாநில இளைஞர் சங்கச் செயலர் அறிவுச்செல்வன் பேசினார்.

          காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பாமக இளைஞர் சங்கச் செயல் வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு மாநில இளைஞர் சங்க துணைச் செயலர் பராதிதாசன் தலைமை தாங்கினார். 

மாநில இளைஞர் சங்கச் செயலர் த.அறிவுச்செல்வன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியது:

             இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பி வாக்களித்தனர். இந்த வாக்குகளால்தான் பாமகவுக்கு தோல்வி ஏற்பட்டது. இந்த தோல்வி நிரந்தரமானது கிடையாது.  கடந்த தேர்தல்களில் படு தோல்வியுற்ற ஆளுங்கட்சிகள்கூட மீண்டும் வெற்றி பெற்றுள்ளன. இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பாமக குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் பல இடங்களில் தோல்வியைத் தழுவியுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 70 ஆயிரம் பேர் பாமகவுக்கு வாக்களித்துள்ளனர். 

             எனவே சட்டப் பேரவைத் தேர்தலில் பாமகவுக்கு ஏற்பட்ட தோல்வி நிரந்தரமானது கிடையாது என்றார். இக் கூட்டத்தில் பாமக மாநில துணைச் செயலர் பொன்.கங்காதரன், மாவட்டத் தலைவர் குமாரசாமி, மாவட்டச் செயலர் பரந்தூர் சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்: