திருவள்ளூரில் பசுமைத் தாயகம் சார்பில் சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

திருவள்ளூர்:

         பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் சாலை விபத்துக்களை தடுக்கக் கோரி மனித சங்கிலி விழிப்புணர்வு போராட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பாலயோகி தலைமையில் திருவள்ளூரில் நடைபெற்றது. 

              திருவள்ளூர்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடைபெற்ற மனிதச் சங்கிலியில் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் தினேஷ், வடக்கு மாவட்டச் செயலாளர் ரமேஷ் அம்பத்தூர் நகர்மன்றத் தலைவர் கே.என். சேகர், கிழக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏ ரவிராஜ் பங்கேற்று போராட்டத்தை துவக்கி வைத்தார். 

              இந்நிகழ்ச்சியில், சாலை விபத்துக்களில் உலகில் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் பலியாகின்றனர். ஆண்டுக்கு 5 கோடி பேர் சாலை விபத்தில் காயமடைகின்றனர். 2010-ம் ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 64 ஆயிரத்து 996 சாலை விபத்துக்கள் நடைபெற்றுள்ள. அதில் 15 ஆயிரத்து 409 பேர் இறந்துள்ளனர். இதற்கு காரணம் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் முறையாக சாலை விதிகளை மதிக்காமல் செல்வதேயாகும். 

             அதேபோல் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதாலும் ஏராளமான விபத்துக்கள் நடைபெறுகிறது. எனவே பொதுமக்களிடம் சாலை விதிகளை கடைபிடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படவேண்டும். அதன் மூலம் விபத்துக்கள் குறைய வேண்டும் என வலியுறுத்தி பேசினர். இதில் பசுமைத் தாயகம் மற்றும் பாமக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். 

0 கருத்துகள்: