கே.என்.சேகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கே.என்.சேகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருவள்ளூரில் பசுமைத் தாயகம் சார்பில் சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

திருவள்ளூர்:

         பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் சாலை விபத்துக்களை தடுக்கக் கோரி மனித சங்கிலி விழிப்புணர்வு போராட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பாலயோகி தலைமையில் திருவள்ளூரில் நடைபெற்றது. 

              திருவள்ளூர்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடைபெற்ற மனிதச் சங்கிலியில் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் தினேஷ், வடக்கு மாவட்டச் செயலாளர் ரமேஷ் அம்பத்தூர் நகர்மன்றத் தலைவர் கே.என். சேகர், கிழக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏ ரவிராஜ் பங்கேற்று போராட்டத்தை துவக்கி வைத்தார். 

              இந்நிகழ்ச்சியில், சாலை விபத்துக்களில் உலகில் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் பலியாகின்றனர். ஆண்டுக்கு 5 கோடி பேர் சாலை விபத்தில் காயமடைகின்றனர். 2010-ம் ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 64 ஆயிரத்து 996 சாலை விபத்துக்கள் நடைபெற்றுள்ள. அதில் 15 ஆயிரத்து 409 பேர் இறந்துள்ளனர். இதற்கு காரணம் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் முறையாக சாலை விதிகளை மதிக்காமல் செல்வதேயாகும். 

             அதேபோல் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதாலும் ஏராளமான விபத்துக்கள் நடைபெறுகிறது. எனவே பொதுமக்களிடம் சாலை விதிகளை கடைபிடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படவேண்டும். அதன் மூலம் விபத்துக்கள் குறைய வேண்டும் என வலியுறுத்தி பேசினர். இதில் பசுமைத் தாயகம் மற்றும் பாமக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். 

கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் கே.என்.சேகரை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரச்சாரம்

 
கும்மிடிப்பூண்டி:

           ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் கே.என்.சேகரை ஆதரித்து கும்மிடிப்பூண்டி பஜாரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் பா.ம.க மாவட்ட செயலாளர் க.ஏ.ரமேஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது.  இதில் கலந்து கொண்டு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
 
                இந்த தொகுதியில் நம்மை எதிர்த்து போட்டியிடும் நடிகர் கட்சிக்கு என்ன கொள்கை இருக்கிறது? என்ன கோட்பாடு இருக்கிறது? நடிகர் தனது கட்சி வேட்பாளரை மேடையில் பளார் பளார் என்று அடிக்கிறார். இந்த நடிகரை கூட்டணியில் ஏன் சேர்த்தோம் என்று அ.தி.மு.க.வினர் நினைக்கிறார்கள். ஜெயலலிதாவும் விஜயகாந்தும் ஓரே மேடையில் பேசுவார்களா?

                10 ஆண்டு காலம் நான் முதலமைச்சராக இருந்தேன். அப்போது இந்த சாதனைகளை செய்தேன் என்று ஜெயலலிதாவால் பட்டியலிட்டு காட்ட முடியுமா? பட்டியல் போட வேண்டாம். ஏதாவது ஒன்றை மட்டுமாவது சொல்ல முடியுமா?. ஆனால் தி.மு.க ஆட்சியில் எனது அருமை நண்பர் கருணாநிதியின் சாதனைகள் ஏராளம். கருணாநிதியின் சாதனைகளை பேச சொன்னால் எதிரே அமர்ந்து இருக்கும் பெண்கள் கூட என்னை விட அருமையாக பேசுவாங்க. எங்கள் அனைவருக்கும் கொள்கை, கோட்பாடு, லட்சியம் இருக்கிறது. 
              மொழி, இனம். நாடு இதைப்பற்றிய கவலை எங்களுக்கு அதிகமாக இருக்கிறது. கொள்கை இல்லாத கூட்டணி அ.தி.மு.க கூட்டணி ஆகும். நமது கூட்டணி கொள்கை உள்ள சமூகநீதி கூட்டணி ஆகும். பா.ம.க.வும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒரே கூட்டணியில் வரவேண்டும் என்ற 20 ஆண்டு கால கனவு இன்றைக்கு நனவாகி உள்ளது.  இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

             இதனையடுத்து கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உள்பட்ட ஊத்துக்கோட்டையிலும் டாக்டர் ராமதாஸ் தேர்தல் பிரசாரம் செய்தார்.

பா.ம.க. 4-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

             பாமக போட்டியிடும் தொகுதிகளுக்கான 4வது வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

               தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் பா.ம.க. போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் பா.ம.க.வுக்கு 30 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

             இத்தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல்    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாட்டாளி இளைஞர் சங்கத்தலைவரும், முன்னாள் மத்திய மத்தியமந்திரியுமான அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை மூன்று பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த பட்டியலில் 

1 .மேட்டூர் - ஜி.கே.மணி, 
2. ஜெயங்கொண்டம் - ஜெ.குரு, 
3. நெய்வேலி - தி.வேல்முருகன், 
4. சோழவந்தான் (தனி) - மு.இளஞ்செழியன், 
5. ஆலங்குடி  - டாக்டர் க.அருள்மணி, 
6. கோவில்பட்டி - கோ.ராமச்சந்திரன், 
7. அணைக்கட்டு - எம்.கலையரசு
8. திருப்போரூர் - திருக்கச்சூர் கி.ஆறுமுகம், 
9. போளூர் - கோ.எதிரொலி மணியன்,
10. ஆர்க்காடு - கே.எல். இளவழகன், 
11. ஜோலார்பேட்டை - கோ.பொன்னுசாமி, 
12. செங்கல்பட்டு - வ.கோ. ரங்கசாமி, 
13. மதுரவாயல் - கி. செல்வம் 
14. பாலக்கோடு  - பாடி செல்வன்  
15. தர்மபுரி - பி.சாந்தமூர்த்தி 

4-வது வேட்பாளர் பட்டியல்

16. பவானி - மகேந்திரன், 
17. ஓமலூர் - தமிழரசு,
18. புவனகிரி - அறிவுச்செல்வன்,
19. பூம்புகார் - அகோரம்
20. பரமத்திவேலூர் - வடிவேல் கவுண்டர்
21. செஞ்சி - கணேஷ் குமார் 
22 . பர்கூர் - ராசா
23 . காஞ்சிபுரம் - உலகராட்சகன்
24 . கும்மிடிப்பூண்டி - கே.என்.சேகர் 
25 . வேளச்சேரி - மு.ஜெயராமன்
26.  திண்டிவனம் (தனி) - மொ.ப.சங்கர் 
27.   திண்டுக்கல் - ஜே.பால்பாஸ்கர்
28 . எடப்பாடி - மு.கார்த்திக்

              போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

 கே.என்.சேகருக்கு வாய்ப்பு 

        கும்மிடிப்பூண்டி தொகுதியில் அம்பத்தூர் நகரசபை தலைவர் கே.என்.சேகர் போட்டியிடுகிறார்.  வேளச்சேரி தொகுதியில் மாநகராட்சி 10-வது மண்டல குழு தலைவர் மு.ஜெயராமன் போட்டியிடுகிறார். 
 
          இதுவரை 28 தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய தொகுதிகளான மைலம், வேதாரண்யம் ஆகிய தொகுதிகளுக்கு  வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள்.


பா.ம.க.வினர் திண்ணை பிரசாரம் செய்து மக்களிடம் ஆதரவு திரட்ட வேண்டும்: டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: 

        எந்தக் கூட்டணியில் இடம்பெற்றாலும் பாமகவுக்கு 45 தொகுதிகள் வேண்டும் என்றார் டாக்டர் ராமதாஸ்.

          திருமுல்லை வாயலை அடுத்த சோழம்பேடு பகுதியில் ஆவடி மற்றும் மதுரவாயல் தொகுதி பா.ம.க. கிளை நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. 

கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதது:

            வருகிற சட்டசபை தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிடாது. கூட்டணி அமைத்துதான் போட்டியிடுவோம். நீங்கள் எத்தகைய கூட்டணி அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ அதே போன்ற கூட்டணி அமையும். கூட்டணி பற்றி இன்னும் 10 நாளில் அறிவிப்பு வெளியிடுகிறேன். எந்தக் கூட்டணி என்றாலும் பா.ம.க.விற்கு மொத்தம் 45 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய கோருவோம். திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 10 தொகுதிகள் உள்ளன. இவற்றில் குறைந்தது 3 தொகுதிகளையாவது பா.ம.க.வுக்கு ஒதுக்கும்படி கோருவோம்.

பிளான் முக்கியம்...

              சட்டசபை தேர்தலையொட்டி இப்போதிருந்தே மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும். பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் மைக்ரோ பிளானிங் எனப்படும் நுண் திட்டமிடல் முறையை பின்பற்றி 2-வது இடத்தை பிடித்தோம். அதே போல் வரும் தேர்தலிலும் திட்டமிட்டு நாம் பணியாற்ற வேண்டும். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் திருவள்ளூர் மாவட்டத்தில்தான் பா.ம.க. அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் பா.ம.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் அதிகம் உள்ளன.

திண்ணைப் பிரச்சாரம்....

           பா.ம.க.வினர் திண்ணை பிரசாரம் செய்து மக்களிடம் ஆதரவு திரட்ட வேண்டும். ஆவடி தொகுதிக்கு மாநில துணை பொதுச் செயலாளர் சிவகோவிந்த ராசும், மதுரவாயல் தொகுதிக்கு மாவட்ட செயலாளர் கே.என்.சேகரும் தலைமை தேர்தல் பணிக்குழு அமைப்பாளர்களாக அமர்த்தப்படுகின்றனர். தேர்தலில் நாம் தனித்து நின்றே வெற்றி பெற முடியும் என்றாலும் கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவு செய்திருக்கிறோம். 

          பிரசாரத்தின்போது கூட்டணி கட்சிகளின் கொள்கைகளையும், நமது கட்சி கொள்கைகளையும் சேர்த்து பிரசாரம் செய்யவேண்டும். பிப்ரவரி மாதத்திற்குள் தொகுதி மாநாடுகளை நடத்த வேண்டும். அதிக எண்ணிக்கையில் இளைஞர்களை அழைத்து வந்து கட்சியில் சேர்க்க வேண்டும்.", என்றார்.