பாமக போட்டியிடும் தொகுதிகளுக்கான 4வது வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் பா.ம.க. போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் பா.ம.க.வுக்கு 30 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இத்தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாட்டாளி இளைஞர் சங்கத்தலைவரும், முன்னாள் மத்திய மத்தியமந்திரியுமான அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை மூன்று பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில்
1 .மேட்டூர் - ஜி.கே.மணி,
2. ஜெயங்கொண்டம் - ஜெ.குரு,
3. நெய்வேலி - தி.வேல்முருகன்,
4. சோழவந்தான் (தனி) - மு.இளஞ்செழியன்,
5. ஆலங்குடி - டாக்டர் க.அருள்மணி,
6. கோவில்பட்டி - கோ.ராமச்சந்திரன்,
7. அணைக்கட்டு - எம்.கலையரசு
8. திருப்போரூர் - திருக்கச்சூர் கி.ஆறுமுகம்,
9. போளூர் - கோ.எதிரொலி மணியன்,
10. ஆர்க்காடு - கே.எல். இளவழகன்,
11. ஜோலார்பேட்டை - கோ.பொன்னுசாமி,
12. செங்கல்பட்டு - வ.கோ. ரங்கசாமி,
13. மதுரவாயல் - கி. செல்வம்
14. பாலக்கோடு - பாடி செல்வன்
15. தர்மபுரி - பி.சாந்தமூர்த்தி
4-வது வேட்பாளர் பட்டியல்
16. பவானி - மகேந்திரன்,
17. ஓமலூர் - தமிழரசு,
18. புவனகிரி - அறிவுச்செல்வன்,
19. பூம்புகார் - அகோரம்
20. பரமத்திவேலூர் - வடிவேல் கவுண்டர்
21. செஞ்சி - கணேஷ் குமார்
22 . பர்கூர் - ராசா
23 . காஞ்சிபுரம் - உலகராட்சகன்
24 . கும்மிடிப்பூண்டி - கே.என்.சேகர்
25 . வேளச்சேரி - மு.ஜெயராமன்
26. திண்டிவனம் (தனி) - மொ.ப.சங்கர்
27. திண்டுக்கல் - ஜே.பால்பாஸ்கர்
28 . எடப்பாடி - மு.கார்த்திக்
போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
கே.என்.சேகருக்கு வாய்ப்பு
கும்மிடிப்பூண்டி தொகுதியில் அம்பத்தூர் நகரசபை தலைவர் கே.என்.சேகர் போட்டியிடுகிறார். வேளச்சேரி தொகுதியில் மாநகராட்சி 10-வது மண்டல குழு தலைவர் மு.ஜெயராமன் போட்டியிடுகிறார்.
இதுவரை 28 தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய தொகுதிகளான மைலம், வேதாரண்யம் ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக