பாட்டாளி மக்கள் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசு மீது பொய் வழக்கு: பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கண்டனம்

சேலத்தில்  பேசிய பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி,

          பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.யுமான தமிழரசு மீது நில மோசடி செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கு பொய் வழக்கு ஆகும். தமிழரசு எந்த தவறும் செய்யவில்லை. அவர் மீது வேண்டும் என்றே திட்டமிட்டு பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அவர் மீதான புகார் குறித்து விசாரிக்காமல் உடனடியாக வழக்கு போட்டு உள்ளனர். இது கண்டனத்துக்குரியது.

          தமிழகம் முழுவதும் நில அபகரிப்பு மோசடி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒருவரின் நிலத்தை யார் அபகரித்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அந்த நிலம் மீட்கப்பட வேண்டும் என்பதில் பா.ம.க.வுக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. அதே சமயம் மோசடியாக ஒரு புகார் கொடுத்து அதன் மீது விசாரிக்காமல் நடவடிக்கை எடுப்பது என்பது ஏற்புடையது அல்ல என்றார்.

0 கருத்துகள்: