சென்னை:
பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பது:-
பா.ம.க. கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயரும், களங்கமும் ஏற்படுத்தும் வகையிலும், கட்சி விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வரும் ஈரோடு மாவட்டத்துக்குட்பட்ட பவானி வடக்கு ஒன்றிய செயலாளர் சே.கு. சண்முகம், அந்தியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் த. பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோரின் ஆலோசனைப்படி கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் செய்யப்படுகிறார்கள். நமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் எவரும் இவர்களோடு எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக