வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் பசுமை தாயகம் அமைப்பு சார்பில் சாலை விபத்துகளைத் தடுக்க வலியுறுத்தி மனிதச் சங்கிலிப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
வேலூரில் காந்தி சிலை அருகே நடைபெற்ற இந்த மனிதச் சங்கிலியில் பாமக மத்திய மாவட்டச் செயலர் வெங்கடேசன், முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி. சண்முகம், பாமக மகளிர் அணி வரலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர் .சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பசுமை தாயகம் அமைப்பினர் பொதுமக்களுக்கு வழங்கினர்.
அரக்கோணம்
அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்ற மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு வேலூர் கிழக்கு மாவட்ட பாமக தலைவர் அ.ம.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் க.சரவணன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து சாலையில் சென்ற அனைத்து வாகனங்களுக்கும் முகப்பு விளக்கில் கறுப்பு வர்ணங்களை பூசினர். இரு சக்கர வாகனங்களில் செல்வோரிடம் துண்டு பிரசுரங்கள் அளித்து, தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள், செல்பேசியில் பேசிக்கொண்டு செல்லாதீர்கள் என்பது போன்ற அறிவுரைகளை வழங்கினர்.
மாநில வன்னியர் சங்க துணை பொதுச் செயலர் ந.ரமணி, பாமக மாவட்ட துணைச் செயலர் அ.மு.வேணுகோபால், மாவட்ட இளைஞர் அணி தலைவர் பொன்.வேலு, மாவட்ட மாணவர் அணி செயலர் கோ.ஏழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாலாஜாபேட்டை:
வாலாஜாபேட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் இருந்து இந்தியன் வங்கி வரையிலும் பசுமை தாயக நிர்வாகிகள் விழிப்புணர்வு மனித சங்கலி நடத்தினர். நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலர் நந்தகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ கே.எல். இளவழகன் தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் எம்.கே.முரளி, கதிர், எம்.தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக