விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் சாலை விபத்துகளைத் தடுக்க விழிப்புணர்வு மனித சங்கிலி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் முன்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
உலகில் சாலை விபத்துகள் அதிகம் இந்தியாவில் நடக்கிறது, இதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. எனவே சாலை விபத்துகளைத் தடுக்க குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தடுப்பது, கட்டாயம் தலைக்கவசம் அணிவது, வேகத்தைக் கட்டுப்படுத்துவது, கட்டாய வார்ப்பட்டை அணிவது ஆகியவற்றை வலியுறுத்தி இந்த மனித சங்கிலி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, பாமக மாநில துணைப் பொதுச் செயலர் செந்தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். மாநில கொள்கை விளக்க அணிச் செயலர் வியன்ன அரசு சிறப்புரையாற்றினார். இதில் மாநில துணைத் தலைவர் தங்க.ஜோதி, மாவட்டச் செயலர்கள் பழனிவேலு, மணிமாறன், மாவட்ட இணைச் செயலர் சிவக்குமார், ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் துரைமுருகன், நகரச் செயலர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக