திருப்பூரில் பசுமைத் தாயகம் சார்பில் சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

திருப்பூர்:

            சாலை விபத்துகளை தடுக்க வலியுறுத்தி திருப்பூரில் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டது.  

             பாட்டாளி மக்கள் கட்சி, பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே திங்கள்கிழமை நடந்த இந்தப் போராட்டத்துக்கு, கட்சியின் மாநில துணைச் செயலர் சி.வடிவேல் கவுண்டர் தலைமை வகித்தார். சிஸ்மா பொதுச்செயலர் கே.எஸ்.பாபுஜி, கட்சி நிர்வாகிகிள் ராஜேந்திரன், மு.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி ஜே.பி.ராஜேந்திரன் வரவேற்றார்.  

              சாலை விபத்துகளைத் தடுக்க தெளிவான கொள்கை வகுக்க வேண்டும், போக்குவரத்து விதிமுறைகள், சட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும், மது அருந்தவிட்டு வாகனங்களை ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.  கட்சி நிர்வாகிகள் வி.எஸ்.கோவிந்தராஜ், கொ.கண்ணன், கே.அ.கண்ணன், வழக்கறிஞர் ஜெ.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


0 கருத்துகள்: