புதுச்சேரி
புதுச்சேரியில் பாமகவினர் சார்பில் நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் விழா பசுமைத் தாயகம் நாளாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பாமக செயலர் ஆர்.அனந்தராமன் தலைமையில் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் ஜூலை 25-ல் பிறந்த குழந்தைகளுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டது. பின்னர் கட்சி நிர்வாகிகள் பைக்கில் ஊர்வலகமாக மங்களம் தொகுதியில் உள்ள விவேகானந்தர் பள்ளியில் மரக்கன்றுகளை நட்டனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.கே.அருள்முருகன், கட்சியின் ஆலோசகர் கா.கோ.ராமகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் சி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக