தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 28-ந்தேதி மரண தண்டனை ஒழிப்பு மாநாடு

சென்னை:

பா.ம.க. மாநில துணை பொது செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் கூறியது:-  

             தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 28-ந்தேதி மறைமலைநகரில் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு நடக்கிறது. மாநாட்டில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகிறார். மேலும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் சார்பில் தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்தியாவில் மரண தண்டனை சட்டத்தை நீக்கம் செய்ய வேண்டும் என்று மாநாட்டில் வலியுறுத்தப்படும்.  

              ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உடனடியாக தூக்கு தண்டனையை எதிர் நோக்கி உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரில் மரண தண்டனையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படும். இந்த 3 பேரின் மரண தண்டனையை ரத்து செய்ய தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி உள்ளன. மாநாட்டின் மூலம் இந்த கோரிக்கையை வலியுறுத்துவோம். 


0 கருத்துகள்: