பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையை ரத்து செய்யகோரி பா.ம.க. சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/35b6599e-6a16-4f3d-995a-b2acc227e203_S_secvpf.gif
 
சென்னை

                ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி பா.ம.க. சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜி.கே. மணி தலைமை தாங்கினார். ஏ.கே. மூர்த்தி முன்னிலை வகித்தார். 
 
ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து டாக்டர் ராமதாஸ் பேசியது:-

             ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ள 3 பேரில் ஒருவர் கூட சம்பவம் நடந்த இடத்தில் இருந்ததாக நிரூபிக்கப்படவில்லை என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள். 6 ஆண்டுகளுக்கு பிறகு கிடப்பில் கிடந்த மனுவை தூசு தட்டி உள்துறை அமைச்சகம் ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளது. இது சட்டத்துக்கு புறம்பானது.  உலகம் முழுவதும் 139 நாடுகளில் மரண தண்டனை விதிக்கப்படுவதில்லை. ஆனால் காந்தி பிறந்தநாட்டில் இன்னும் மரண தண்டனை ஒழிக்கப்படவில்லை.   முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கிருஷ்ணய்யர் தமிழர்களின் குரலை மதித்து மத்திய அரசை வலியுறுத்த தமிழக அரசு முன்வரவேண்டும் என்று கடிதம் எழுதி உள்ளார்.

              தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இந்த 3 பேரின் தூக்கு தண்டனை மட்டுமின்றி நாட்டில் மரண தண்டனை சட்டத்தையே மத்திய அரசு ரத்து செய்யவேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் 5-ந்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு ராமதாஸ் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், மாவட்ட செயலாளர்கள் பி.கே. சேகர், ஜமுனா கேசவன், வி.ஜெ. பாண்டியன், சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்: