உள்ளாட்சி தேர்தலில் சிதம்பரம் நகரில் 33 வார்டுகளிலும் பா.ம.க தனித்துப் போட்டி

சிதம்பரம்:

             வரும் உள்ளாட்சி தேர்தலில் சிதம்பரம் நகரில் உள்ள 33 வார்டுகளிலும் தனித்துப் போட்டியிடுவது என நகர பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

             சிதம்பரம் நகர பாமக பொதுக்குழுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நகரச் செயலாளர் முத்து.குமார் தலைமை வகித்தார். நகரத் தலைவர் சு.தட்சிணாமூர்த்தி வரவேற்றார். மாவட்டச் செயலாளர் வேணு.புவனேஸ்வரன், ம.அன்பழகன், மூத்த நகர்மன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், அண்ணாமலை நகர் செயலாளர் ச.திருநாவுக்கரசு, மாயவேல், எஸ்.ஆர்.நாகவேல், ப.குருசேவ், அருள்கோவிந்தன், சந்திரமோகன், கோவி.தில்லைநாயகம், ரா.வெங்கடேசன், ரா.குமார், ரா.ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

தீர்மானங்கள்: 

சிதம்பரம் நகரில் அனைத்து வார்டுகளிலும் பாமக கொடியேற்றுவது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, 

உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் தனித்துப் போட்டியிடுவது என அறிவித்த நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது, 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மூவரது தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்: