விவசாய நில‌ங்க‌ளி‌ல் ‌சிற‌ப்பு பொருளாதார ம‌ண்டல‌ம் அமை‌க்க தடை: பா.ம.க. நிறுவனர் ராமதா‌ஸ் கோரிக்கை

       மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதாவுக்கு வரவேற்பு தெரிவி‌த்து‌ள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், விளை நிலங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க தடை விதிக்க வேண்டும் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  

            அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக வேளாண் விளை நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்று கடந்த 5 ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறேன். அதிலும் குறிப்பாக சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பெரிய நிறுவனங்கள் மறைமுகமான நில வணிகத்தில் ஈடுபடுவதை எதிர்த்தும், இதற்காக ஏழை, எளிய உழவர்களின் வாழ்வாதாரமான நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்றும் ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறேன்.


           அரசின் நிலம் எடுப்பு கொள்கைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு அளித்தல் சட்டம் திருத்தப்படும் என்று மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமை‌ச்ச‌ர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார். அதற்கான வரைவு சட்டத்தையும் தயாரித்து அரசின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். எக்காரணத்தை முன்னிட்டும் பாசன வசதி பெறும் நிலங்களோ அல்லது பலவகையான பயிர்கள் விளையும் நிலங்களோ கையகப்படுத்தப்படாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.


               
            தனியார் நிறுவனங்களுக்காக அரசே நிலத்தை கையகப்படுத்தி தராது என்றும், அரசின் திட்டங்களுக்காக நிலத்தை கையகப்படுத்த வேண்டுமானால், அதனால் பாதிக்கப்படும் நில உரிமையாளர்களில் 80 சதவீதத்தினரின் ஒப்புதலை பெறவேண்டும் என்றும் வரைவு சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பா.ம.க போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. இதை பா.ம.க. சார்பில் வரவேற்கிறேன்.



            தவிர்க்க முடியாத அவசர திட்டங்களுக்காக நிலத்தை கையகப்படுத்தும்போது, நகர்ப்புறங்களாக இருந்தால் சந்தை மதிப்பைவிட 2 மடங்காகும், கிராமப்புறங்களாக இருந்தால் சந்தை மதிப்பைவிட 6 மடங்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று வரைவுச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல. கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு சந்தை மதிப்பைவிட 10 மடங்கு கூடுதல் விலை தரவேண்டும். அதுமட்டுமின்றி, நிலம் தருவோரின் குடும்பங்களுக்கு அவர்களது நிலத்தில் தொடங்கப்படும் நிறுவனத்தில் வேலை வழங்க வேண்டும். லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஒதுக்க வேண்டும்.

               சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு விளைநிலங்களை கையகப்படுத்துவதால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம்தான் பாதிக்கப்படுகிறதே தவிர, எந்த வகையிலும் பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை. இதை உணர்ந்து விளை நிலங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று ராமதா‌ஸ் வலியுறுத்‌தியு‌ள்ளா‌ர்.

1 கருத்துகள்:

dakaraidakila சொன்னது…

ஒரு அரசின் கடமை மக்களுக்கு இலவசமாக தரவேண்டியது கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், வேளாண்மை உற்பத்தி பொருட்கள். ஆனால் வெறும் ஓட்டுக்காக இலவசம் என்ற பெயரில் கண் கட்டி வித்தை காண்பித்து மக்களை ஏமாற்ற முடியாது. மீனை தருவதை விட பிடிக்க கற்று கொடுப்பதுதான் சிறந்த அரசு. கல்வி என்ற பெயரில் தனியார் பள்ளிகள் கொள்ளையடிகின்றனர். இதை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரணும். காலியாக உள்ள அரசு பணி இடங்களை நிரப்புவதும், தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு அமைவது காலத்தின் கட்டாயம். இதை அரசு செய்ய வேண்டும். அம்பானிக்கு கிடைக்கும் அதே மருத்துவம், உயர் சிகிச்சை அனைத்து ஏழை மக்களுக்கும் கிடைக்கணும். "கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி விவசாயி" . எனவே வேளாண்மையில் தன்னிறைவு பெற வேளாண் சார்ந்த விதைகள், பொருட்கள், சொட்டு நீர் பாசனம் இலவசமாக தரலாம். மது, போதை பொருட்கள் போன்ற அரக்கனை ஒழிக்கவும், அனைவருக்கும் அனைத்தும் கிடைப்பது, கட்டாய கல்வி, பெண்கள் முன்னேற்றம் , வரதட்சணை ஒழிப்பு & சமஉரிமை, போதை பொருள் ஒழிப்பு, சினிமா ஆபாசம், சினிமாவில் மயங்கியுள்ள இளைஞர்களை சீராக்குவது, கிரிக்கெட் சூதாட்ட ஒழிப்பு, வன்முறை& தீவிரவாதம் ஒழிப்பு. இவற்றை பாமக மட்டுமே நிறைவேற்ற முடியும். வேறு எந்த கட்சியாலும் நிறைவேற்ற முடியாது. ஏன் அவர்களால் பேசக்கூட முடியாது. முடிந்தால் இதை செய்யுங்கள். இல்லாவிடில் ஆட்சி அதிகாரத்தை ஒரு வருடம் பாமகவுக்கு கொடுங்கள். இவற்றை நிறைவேற்றும் சக்தி, வல்லமை கொண்டது பாமக மட்டும்தான் . வேறு எந்த ஆண்ட கட்சிக்கும் வல்லமை இல்லை. பாமக ஆட்சிக்கு வரவேண்டும். இது காலத்தின் கட்டாயம்.