ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட பா.ம.க.பொதுக்குழு கூட்டம்

திருவண்ணாமலை:

          ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலையில் இன்று நடந்தது. மாநில துணை பொதுச்செயலாளர் எதிரொலி மணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாண்டியன், ஜானகிராமன், முன்னிலை வகித்தனர். 
 
இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியது:-

           தமிழகம் முழுவதும் பா.ம.க. சார்பில் டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டம் வெகு விரைவில் அறிவிக்கப்படும்.   திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. வருகிற உள்ளாட்சி தேர்தலில் இங்கு பா.ம.க. தனித்து போட்டியிடும். இதற்காக ஒரு குழு அமைக்கப்படும். குழு தேர்ந்தெடுப்பவர்கள் போட்டியிடுவார்கள் அவர்களை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். வருங்காலத்தில் பா.ம.க. தனி பெரும் கட்சியாக வளர்ச்சி பெறும்.  இவ்வாறு அவர் கூறினார். பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரிகள் பொன்னுசாமி, வேலு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்: