கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் பா.ம.க.வினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பும் நடந்தது.
கடலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சண்முகம், நகரச் செயலர் ஆனந்த், மாவட்ட மாணவரணிச் செயலர் அருள் பாபு, ஒன்றியச் செயலர்கள் செல்வம், தட்சிணாமூர்த்தி, நகராட்சி உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், திருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திட்டக்குடி
திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன் மாநில தேர்தல் பணிக் குழு செயலர் தனபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக