உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி போட்டி

 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/5e913b94-fffb-4c80-9e12-bc68ee7b87f8_S_secvpf.gif


வேலூர்:
              வேலூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஆம்பூரில் நடந்தது.

கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியது:

              திருப்பத்தூரை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் தமிழகத்தில் ஒரு தொகுதி, 1 1/2 தொகுதி உள்ள இடங்களெல்லாம் மாவட்ட தலைநகரமாக உள்ளது. ஆனால் வேலூர் மாவட்டத்தில் 13 தொகுதிகள் உள்ளது. எனவே இதனை 3 மாவட்டமாக கூட பிரிக்கலாம். திருப்பத்தூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். ஆனால் அதற்கு இன்னும் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஆனால் நாம் திருப்பத்தூர் மாவட்டம் என்றே அழைப்போம்.
 
             தமிழகத்தில் மக்கள் பிரச்சினைக்காக போராடுகின்ற கட்சி பா.ம.க.தான். 100க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்திவிட்டோம். தமிழகத்தில் திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் இனிமேல் கூட்டணி கிடையாது. உள்ளாட்சி தேர்தலில் எல்லா இடங்களிலும் பா.ம.க. போட்டியிடும் மிகப்பெரிய வெற்றிபெற அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.

0 கருத்துகள்: