
மத்திய அரசின் இட ஒதுக்கீடு கொள்கையை எதிர்க்கும் காட்சிகளும், வச னங்களும் படத்தில் இடம் பெற்றிருப்பதாகவும், அவை களை நீக்கவேண்டும் என்றும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
“அரக்சன்” படத்தை திரையிட்டால், சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட லாம் என்று கருதியதால் உ.பி., பஞ்சாப், ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களில் அந்த படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டது.
இந்த 3 மாநிலங்களை தவிர்த்து இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங் களிலும் ஆராக்ஷன் படம் வெளியிடப்பட்டது. சென்னையில் சத்யம், எஸ்கேப், ஐநாக்ஸ், ஈகா, பி.வி.ஆர். மெலோடி, மாயாஜால், ஏ.ஜி.எஸ்., பேம் நேஷனல் ஆகிய தியேட்டர் களில் ஆராக்ஷன் படம் திரையிடப்பட்டுள்ளது.
இந்த படத்தை தடை செய்யக்கோரி சத்யம் தியேட்டர் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு சென்னை மாவட்ட அமைப் புச் செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். கவுன் சிலர்கள் வெங்கடேசன், ஏழுமலை, ஜமுனா கேசவன், செயலாளர் சிற்றரசு உள்பட 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
“ தடை செய், தடை செய் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஆராக்ஷன் படத்தை தடை செய்” என்று கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி கிடையாது என்பதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக