இளம் கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு: பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு




சென்னை:
          பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக  பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:
           2013 -ம் கல்வியாண்டு முதல் இளம் கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு நாடு தழுவிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கான ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் கூறியிருக்கிறார். அமைச்சரின் இந்த அறிவிப்பு ஒடுக்கப்பட்ட மாணவர்களின் உயர் கல்வி கனவுகளைப் பொசுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இதை கடுமையாக கண்டிக்கிறேன்.
              பொருளாதாரத் துறையில் இந்தியா வளர்ச்சி அடைந்துவிட்டதாக மத்திய அரசு மார் தட்டிக் கொண்டபோதிலும், உயர் கல்வியில் இந்தியா இன்னும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது. உலகின் மிகச் சிறிய நாடுகளில் எல்லாம் உயர் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 30 விழுக்காட்டிற்கும் கூடுதலாக இருக்கும் நிலையில், இந்தியாவில் உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கை வெறும் 12.5 சதவீதமாகவே உள்ளது.அதாவது இந்தியாவில் தொடக்கப் பள்ளிகளில் சேரும் மாணவர்களில் 87.5 சதவீதம் மாணவர்களுக்கு உயர் கல்வி கிடைப்பதில்லை. 
               இது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக கபில்சிபல் பதவியேற்ற நாளிலிருந்தே ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை எப்படியாவது பறித்துவிட வேண்டும் என்று சபதம் ஏற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று தமது அதிகார வரம்பை மீறி பரிந்துரைத்த கபில்சிபல் அடுத்தகட்டமாக தொழில்நுட்ப படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்திருக்கிறார். இது போதாது என்று இளநிலை படிப்புகளுக்கும் பொதுநுழைவுத் தேர்வு கொண்டு வரப்படும் என்று அறிவித்து அடித்தட்டு மாணவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார். 
               சமூக நீதியில் அக்கறை கொண்ட எவரும் இந்த முயற்சிகளை அனுமதிக்க மாட்டார்கள்.எனவே பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை ஆய்வு நிலையிலேயே கைவிட வேண்டும்.அனைத்து படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்த முயற்சிப்பதன் மூலம் மாநில அரசுகளின் கல்வி உரிமையை கபில்சிபல் பறித்து வருகிறார். இதே நிலை நீடித்தால், கல்வித்துறையையே மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலில் சேர்த்துவிடுவார். எனவே, கபில்சிபலின் இந்த முயற்சிகளை எதிர்த்து தமிழக அரசும் குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

1 கருத்துகள்:

dakaraidakila சொன்னது…

தமிழ்நாட்டு மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு வன்னியர்கள். அதாவது 2.5 கோடி. இவர்களில் 1 கோடிக்கும் மேல் உள்ள வாக்காளர்கள். இவர்கள் அனைவரும் பாமகவுக்கு வாக்கு அளித்தால் 100 சட்டசபை தொகுதியில் பாமக வெற்றி பெரும். எனவே அனைவரின் வாக்குகளையும் பெறுவதற்காக, வன்னியர் சங்கம் சார்பில் ஒரு மடல் அச்சடித்து, தமிழகம் முழுதும் உள்ள அனைத்து வன்னியர்களிடமும் கொடுக்கணும். அப்போதுதான் அவர்களுக்கு பாமக ஆட்சி பற்றி ஒரு எண்ணம் வரும். மடலின் கருத்து பின்வருமாறு. தமிழ்நாட்டின் தனிப்பெரும் சமுதாயமாக உள்ள வன்னியர் சமுதாயமே !, இந்தியாவில் மற்ற மாநிலங்களில் எல்லாம் பெரும்பான்மை சமூகத்தினர்தான் ஆள்கின்றனர். ஆனால் இங்கு வந்தேறிகளும், மைனரிடிகளும்தான் இதுவரை ஆட்சி செய்துள்ளனர். இவர்கள் சமுதாயத்திற்கு செய்தது என்ன? கல்வி கொள்ளையர்களை பெருக விட்டது. சமுதாயத்துக்கு தீங்கு விளைவிக்கும் மது கடைகளை திறந்தது. அவ்வளவுதான். இவர்கள் கோடி கோடியாய் கொள்ளையடித்து தற்போது ஆசியாவிலேயே மிகப்பெரிய செல்வந்தர்களாகவும், ராஜா ராணி போலவும் வாழ்ந்து வருகின்றனர். இந்த பணம் எல்லாம் யாருடைய பணம். மக்கள் வரிப்பணம். நம் பெரும்பான்மை வன்னியர்களுக்கு சேர வேண்டிய பணம். பெரும்பான்மை வன்னியர்களின் வாக்குகளை வாங்கி ஏப்பம் விட்டவர்கள். பாமக ஆட்சி இதுவரை செய்யவில்லை. ஆனால் வன்னியர்களின் முன்னேற்றத்திற்காக கல்வி கோயில் நிறுவியுள்ளது. பாமக ஆட்சி செய்திருந்தால், இதே கல்விகோயில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நிறுவியிருக்கும் அல்லவா? . தமிழ்நாட்டில் வன்னியர் முன்னேற்றத்திற்கும், உரிமைக்கும் ஒரே பாடுபடும் கட்சி பாமக. டாக்டர் அய்யா அவர்கள் கடந்த 30 வருடங்களாக சமுதாயத்திற்காக பாடுபடுகிறார். அவர் நமக்கு கிடைத்த வரபிரசாதம் அல்லவா. நீங்கள் உங்களை பற்றி அறிந்தால், உங்களுடைய முன்னோர்களை பற்றி அறிந்தால், தற்போதுள்ள உங்கள் நிலையை அறிந்தால் கண்டிப்பாக உங்கள் ஆதரவை பாமகவிற்கு தருவீர்கள். கடமையை செய், பலனை எதிர்பாராதே என்ற பழமொழிக்கு ஏற்ப வன்னியர்கள் தங்கள் கடமையான வாக்குகளை பாமகவிற்கு அளிக்கணும். பலன் தானாக வரும். பண உதவியோ, பொருள் உதவியோ பாமக கேட்கவில்லை. வாக்குகள் மட்டும்தான். பெரும்பான்மை சமுதாயமான நாம் வஞ்சிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அடிமைப்பட்டு கிடக்கிறோம். இதற்கு காரணம் என்ன? நாம் ஆளவில்லை. வன்னியர்கள் வாழவேண்டுமானால் பாமக ஆட்சிக்கு வரணும். பாமக ஆட்சிக்கு வரவேண்டுமானால் வன்னியர்கள் அனைவரும் தம் கடமையை வாக்குகளாக நிறைவேற்ற வேண்டும். நாம் படையாண்ட ஜாதி, ஆண்ட பரம்பரை, மன்னர் இனம், பாரண்ட வம்சம். இந்த தமிழ் பூமியை நம் மன்னர்கள் பல்லவன், சோழன், சம்புவராயர் ஆட்சி செய்துள்ளனர். சினிமா கவர்ச்சியையும், இலவசங்களையும் நம்பி ஏமாறாதீர்கள். இதை நம்பி நீங்கள் உங்கள் கௌரவத்தையும், தரத்தையும் தாழ்த்திக்கொள்ளதீர்கள். இன்று வன்னியர்கள் விவசாயிகளாகவும், தொழிலாளர்களாகவும் தான் உள்ளோம். இன்னும் மற்ற ஜாதி போல் முன்னேறவில்லை. இதற்கு காரணம் நாம் ஆளவில்லை. மக்கள் தொகைக்கு ஏற்ற அரசு வேலை இல்லை. குறைவு. இதனால் தனியார் துறையை நம்பி படித்தவர்கள் வேலை தேடுகிறார்கள். அங்கே பார்ப்பன், முதலியார், நாயுடு ஆதிக்கம்தான் உள்ளது. பாமக ஆட்சி இருந்திருந்தால் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு கொடுத்திருக்கும் அல்லவா. எனவே சிந்திக்க வேண்டும். படித்தவர்கள் படிக்காதவர்களுக்கு எடுத்து சொல்லணும். பசித்திரு, விழித்திரு, குறிக்கோளை அடைந்திரு. அதுபோல் உங்கள் எண்ணம் பாமக ஆட்சி அமைவதாக இருக்க வேண்டும். மற்றவர்களை நாம் இதுவரை ஆளவிட்டு , இன்னும் அடிமையாய் இருக்கிறோம். கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வந்ததால்தான் நம்மில் பலர் படித்துள்ளோம். இல்லாவிடில் இன்னும் ஒடுக்கப்பட்ட சமுதாயமாக இருந்திருப்போம். இது கிடைத்தது பாமகவால் என்பதை எண்ணி பார்க்கவேண்டும். பெரும்பான்மை சமுதாயமாக இருக்கும் நாம் ஆட்சி செய்திருந்தால் இந்நேரம் தமிழ்நாடு ஒரு பண்பாடு மிகுந்த வளர்ச்சியடைந்த பாதையில் சென்றிருக்கும். "வன்னியர் என்று சொல்லுடா. வானுயர்ந்து நில்லடா" என்பது பழமொழி. எனவே ஆண்ட பரம்பரையான, சத்ரிய வம்சத்தை சார்ந்த நாம் மனதில் ஒரு உறுதி கொள்ள வேண்டும். சமுதாயத்தை காப்பதும், ஆட்சி செய்வதும் சத்ரிய வம்சமாகதான் இருக்கணும். வளர்க வன்னியர் ஒற்றுமை., நாளைய ஆட்சி பாமக வாக இருக்கணும்.