சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் கருணை மனுவை குடியரசு தலைவர் தள்ளுபடி செய்ததற்கான அதிகாரப்பூர்வமான ஆணை வேலூர் சிறை நிர்வாகத்திற்கு வந்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து அடுத்த 7 நாட்களில் பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது மனிதாபிமானமுள்ள அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்திருக்கிறது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் தடா சட்ட விதிகளுக்கு முரணாக 19 வயதிலேயே கைது செய்யப்பட்டவர். தடா சட்ட விதிகளின்படி சி.பி.ஐ.-யால் சித்திரவதை செய்யப்பட்டு பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
முருகன், சாந்தன் ஆகியோருக்கும் இதே முறையில்தான் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் தனிமை சிறை கொட்டடியில் கொடுமையை அனுபவித்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்த கருணை மனு மீது 11 ஆண்டுகள் கழித்து குடியரசு தலைவர் முடிவெடுத்துள்ளார். ஏற்கனவே தூக்கு தண்டனையைவிட மிகக் கொடுமையான தனிமை சிறை தண்டனையை அனுபவித்துவிட்ட 3 பேருக்கும் மீண்டும் ஒரு தண்டனை வழங்குவது நீதியாக இருக்காது.
ஒருவரின் கருணை மனு மீது முடிவெடுப்பதில் காலதாமதம் செய்யப்பட்டால், அவருடைய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எத்தனையோ தீர்ப்புகளை வழங்கியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்த தேவீந்தர் சிங்பால் புல்லார் என்பவரின் கருணை மனு மே மாதம் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை கடந்த 23-ந் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், அவரது கருணை மனு மீது முடிவெடுப்பதில் தாமதம் காட்டப்பட்டது சரியல்ல என்றும், இதை அடிப்படையாக வைத்து அவரது தண்டனையை குறைப்பது குறித்த கோரிக்கை மீது முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் இந்தக் கருத்து முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் நீதி வழங்குவதற்கு பொருந்தும். இன்னொருபுறம் இந்த 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், கருத்தரங்கம், மாநாடு, மனிதசங்கிலி என பல்வேறு மக்கள் இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
நாகரிகமான சமுதாயத்தில் தூக்கு தண்டனை என்பது பெரும் களங்கமாக இருக்கும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இம்மூவரும் தண்டிக்கப்பட்ட ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ.யின் முன்னாள் இயக்குநர் கார்த்திகேயனே, இந்தியாவில் தூக்கு தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். எந்த நிமிடமும் உயிர் பறிக்கப்படுமோ என்ற வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் 3 பேரையும் காப்பாற்ற உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழக அரசுக்கு இருக்கும் நிருவாக அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்களின் தூக்கு தண்டனையை குறைப்பதற்கு தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் முடியும்.
எனவே இந்த 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்காக தமிழகச் சட்டப்பேரவையின் தீர்மானம் நிறைவேற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக