செஞ்சி:
விழுப்புரம் வடக்கு மாவட்ட வன்னியர் சங்க ஆலோசனைக் கூட்டம் செஞ்சியில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட துணைச் செயலர் பி.டி.எம்.அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலர் ஆ.கோ.சிங்காரவேலு முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ரா.செல்வமணி வரவேற்றார். மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் மே.பெ.சி. ராஜேந்திரன், மேல்மலையனூர் ஒன்றியக் குழுத் தலைவர் அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். செஞ்சி ஒன்றியச் செயலர் புதூர் கே.பி. சம்பத், மேல்மலையனூர் ஒன்றியச் செயலர் பூங்காவனம், வல்லம் ஒன்றியத் தலைவர் முனுசாமி, மாவட்ட துணைத் தலைவர் ஜெயபால் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
விழுப்புரம் வடக்கு மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் 22-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு வருகைதரும் வன்னியர் சங்கத் தலைவர் குருவுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது,
வன்னியர் சங்க அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவது,
கனல் சந்தா சேர்ப்பது.
செஞ்சி, மயிலம் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் வன்னியர் சங்க கொடி ஏற்றுவது,
3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசை கேட்டு கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக