திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பாமக சார்பில் போடியிட புதன்கிழமை 13 பேர் விருப்ப மனு அளித்தனர்.
உள்ளாட்சித் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் கட்சி அலுவலகத்தில் மனு அளிக்கலாம் என்று கட்சியின் பாட்டாளி இளைஞர் சங்க மாநிலச் செயலர் த. அறிவுச்செல்வன் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இதைத்தொடர்ந்து, சிந்தாமணி அண்ணா சிலை அருகேயுள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை விருப்ப மனு வாங்கும் பணி தொடங்கியது.
மாவட்ட ஊராட்சி உறுப்பினர், வார்டு கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்குப் போட்டியிட விருப்பம் தெரிவித்து புதன்கிழமை 13 பேர் மனு அளித்தனர். வெள்ளிக்கிழமை ஏராளமானோர் விருப்ப மனு அளிக்க இருப்பதாக கட்சியினர் தெரிவித்தனர். இந்த விருப்ப மனு வாங்கும் பணி செப். 12-ம் தேதி வரை தொடரும் என்று அறிவுச்செல்வன் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக