விருப்ப மனு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருப்ப மனு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உள்ளாட்சித் தேர்தலில் திண்டிவனத்தில் போட்டியிட பா.ம.க.வினர் விருப்ப மனு

திண்டிவனம்:

         திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் பா.ம.க., வினர் மனு அளித்தனர். திண்டிவனம் நகராட்சி, மரக்காணம் பேரூராட்சி சேர்மன், மரக்காணம், ஒலக்கூர் ஒன்றியங்களுக்கான உள்ளாட்சி பதவிகளுக்கான மனுக்கள் பெறப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ் செல்வன், மாநில துணைத் தலைவர் கருணாநிதி இருவரும் பா.ம.க.வினரிடம் விருப்ப மனு பெற்றனர். சாரம் ஜானகி ராமன், மாவட்ட செயலர் மலர்சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

உள்ளாட்சித் தேர்தலில் நெய்வேலியில் பாமக சார்பில் போட்டியிட விருப்ப மனு

நெய்வேலி:

          உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள பாமகவினரிடமிருந்து, கட்சியின் நிர்வாகிகள் சனிக்கிழமை விருப்ப மனுவை பெற்றனர்.

           உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி நெய்வேலி பாட்டாளித் தொழிற்சங்க அலுவலகத்தில் பாமக மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலத் துணைப் பொதுச்செயலர் ஈச்சங்காடு ப.சண்முகம் கலந்து கொண்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எடுத்துரைத்தார். மேலும் உள்ளாட்சித் தேர்தலில் திராவிடக் கட்சிகள் துணையின்றி போட்டியிடுவது என்ற முடிவை மேற்கொண்ட நிறுவனர் ராமதாசுக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.   

            மேலும் கடலூர் மாவட்டத்தில் பெருகி வரும் வழிப்பறி மற்றும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்க போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றினர். இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கம்மாபுரம் மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தைச் சேர்ந்த பாமகவினரிடமிருந்து விருப்ப மனுவை ஈச்சங்காடு ப.சண்முகம் பெற்றுக் கொண்டார்.    இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர் தர்மலிங்கம், நெய்வேலி நகரச் செயலர் சக்கரவர்த்தி மற்றும் பாமக தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உள்ளாட்சி தேர்தல்: விழுப்புரம் காணை ஒன்றியத்தில் பா.ம.க.சார்பில் போட்டியிட விருப்ப மனு

விழுப்புரம்:

            விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியத்தைச் சேர்ந்த பா.ம.க., நிர்வாகிகள் மாவட்ட அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்ட பா.ம.க., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பழனிவேல் விருப்ப மனு பெற்றார். காணை ஒன்றியம் அத்தியூர்திருக்கை கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான விருப்ப மனு அளித்தார். மாநில துணை தலைவர் தங்கஜோதி, செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், ஒன்றிய செயலாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பா.ம.க.சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் போட்டியிட விருப்ப மனு

திருச்சி:

          திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பாமக சார்பில் போடியிட புதன்கிழமை 13 பேர் விருப்ப மனு அளித்தனர்.

             உள்ளாட்சித் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் கட்சி அலுவலகத்தில் மனு அளிக்கலாம் என்று கட்சியின் பாட்டாளி இளைஞர் சங்க மாநிலச் செயலர் த. அறிவுச்செல்வன் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இதைத்தொடர்ந்து, சிந்தாமணி அண்ணா சிலை அருகேயுள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை விருப்ப மனு வாங்கும் பணி தொடங்கியது.

           மாவட்ட ஊராட்சி உறுப்பினர், வார்டு கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்குப் போட்டியிட விருப்பம் தெரிவித்து புதன்கிழமை 13 பேர் மனு அளித்தனர். வெள்ளிக்கிழமை ஏராளமானோர் விருப்ப மனு அளிக்க இருப்பதாக கட்சியினர் தெரிவித்தனர். இந்த விருப்ப மனு வாங்கும் பணி செப். 12-ம் தேதி வரை தொடரும் என்று அறிவுச்செல்வன் தெரிவித்தார்.

பா.ம.க.சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டையில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம்

திருக்கோவிலூர்:

              உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் பாமகசார்பில் போட்டியிட  விருப்பமனு அளிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

           திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி தொகுதிகளுக்கு உள்பட்ட பாமகவினர் வரும் 9,10,11 ஆகிய தேதிகளில் விருப்ப மனு செய்யலாம் என்று கட்சியின் மாநில துணை பொதுச் செயலரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான வி.ஏ.டி.கலிவரதன் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து  மாநில துணை பொதுச் செயலரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான வி.ஏ.டி.கலிவரதன் கூறியது; 

        திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய தொகுதிக்குட்பட்டவர்கள் 9-ம் தேதி, திருக்கோவிலூர் பயணியர் விடுதியிலும், 

          கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் ஆகிய தொகுதிக்குட்பட்டவர்கள் 10,11 ஆகிய தேதிகளில் கள்ளக்குறிச்சி பயணியர் விடுதியிலும் விருப்ப மனு செய்யலாம்.  

 கட்டண விபரம்

இதில் மாவட்டக்குழு உறுப்பினருக்கு ரூ.3,000, 
 ஒன்றியக்குழு உறுப்பினருக்கு ரூ.1,000, 
 ஊராட்சித் தலைவருக்கு ரூ.1,000, 
பேருராட்சித் தலைவருக்கு ரூ.2,000, 
பேருராட்சி உறுப்பினர்களுக்கு ரூ.500, 
நகர்மன்றத் தலைவருக்கு ரூ.3,000, 
நகர் மன்ற உறுப்பினருக்கு ரூ.1,000 

கட்டணமாக செலுத்தி மனு செய்ய வேண்டும் என்றார்.

பா.ம.க.சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விழுப்புரம் மாவட்டதில் விருப்ப மனு

விழுப்புரம்:

            விழுப்புரம், விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பாமகவினர் புதன்கிழமை விருப்பமனு தாக்கல் செய்தனர்.  

             விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியில் உள்ள பாமக நகர அலுவலகத்தில் மாநில துணைப் பொதுச் செயலர் பா.செந்தமிழ்ச்செல்வன் விருப்ப மனுக்களை பெற்றார். அப்போது விழுப்புரம் நகர்மன்றத் தலைவருக்கான விருப்ப மனுவை பெருமாள் தாக்கல் செய்தார்.  இந்நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் தங்க.ஜோதி, மாவட்டச் செயலர் ப.பழனிவேல், வன்னியர் சங்க மாவட்டச் செயலர் புண்ணியகோட்டி, இளைஞர் அணி சிவக்குமார், ஒன்றிய செயலர்கள் புகழேந்தி, சம்பத், சீனிவாசன், துரை, சுரேஷ், ரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பா.ம.க.சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட திருவண்ணாமலை மாவட்டதில் விருப்ப மனு

திருவண்ணாமலை:

           திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பா.ம.க.வினர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர். 

             பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பின்படி பா.ம.க. சார்பிலும் மனுக்கள் புதன்கிழமை முதல் வாங்கப்படுகின்றன. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ம.க. அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளரும், மாநில துணைப் பொதுச் செயலருமான கோ.எதிரொலிமணியன் விருப்ப மனுக்களை கட்சியினரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். 

              மகளிரணி நிர்வாகி ஜோதி செல்வம், தலைவர் அ.முத்து, துணைச் செயலர் கே.அறவாழி, ஒன்றியத் தலைவர் லோ.சதாசிவம், துணைச் செயலர் என்.குப்புசாமி உள்பட பலர் மனு அளித்தனர்.  மாநில துணைத் தலைவர்கள் ம.சண்முகசுந்தரம், இரா.காளிதாஸ், செயலர்கள் இரா.ஜானகிராமன், இல.பாண்டியன், தலைவர் இரா.ஏழுமலை, நகர செயலர் மு.சண்முகம் உள்பட பலர் உடனிருந்தனர்.  

உள்ளாட்சி தேர்தலில் 15 ஆண்டுக்குப் பின் பா.ம.க, தனித்து போட்டி

 சேலம்: 

           தமிழகத்தில், 15 ஆண்டுகளுக்குப் பின், உள்ளாட்சி தேர்தலில், பா.ம.க., தனித்துப் போட்டியிட உள்ளது,'' என, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி   தெரிவித்தார். சேலம் மாவட்ட பா.ம.க., சார்பில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் பெறுவதை, நேற்று அக்கட்சியின் தலைவர் மணி துவக்கி வைத்தார்.

அதன் பின் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி கூறியதாவது: 

               உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும், பா.ம.க.,வினரிடம் இருந்து விருப்ப மனுக்கள், 12ம் தேதி வரை வாங்கப்படும். இந்த தேர்தலில், பா.ம.க, வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது. 1996 தேர்தலில், பா.ம.க, தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றது. 15 ஆண்டுகளுக்குப் பின், தற்போது தனித்துப் போட்டியிடுகிறது. பா.ம.க,வுக்கு, மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது. 

            அத்துடன், நிர்வாகிகளுக்கும் தேர்தல் அனுபவம் இருப்பதால், வெற்றியை தேடித் தருவர். உள்ளாட்சி தேர்தலில், ஓட்டுச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். இந்த முறை மூலம் மட்டுமே, நேர்மையான முடிவுகளை கொடுக்க முடியும். இவ்வாறு மணி கூறினார். 




தேனி மாவட்டத்தில் பாமக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம்

கம்பம்:

            தேனி மாவட்டத்தில் பாமக சார்பில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள், செப்.7-ம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என, கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் பொன். காட்சிகண்ணன் தெரிவித்துள்ளார்.  

           பாமக சார்பில், தேனி அன்னலட்சுமி ஹோட்டலில் செப். 7-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை, மாநிலத் துணைப் பொதுச் செயலர் பொன். காட்சிகண்ணன் தலைமையில், மாநில மகளிர் அணிச் செயலர் கலைமதி குணசேகரன் முன்னிலையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் விருப்ப மனு பெறப்படும்.  போட்டியிட விருப்பமுள்ள கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சி நிர்ணயக் கட்டணத்தை செலுத்தி, விருப்ப மனுவை அளிக்கலாம் என, கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலர் பொன். காட்சிகண்ணன் தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தல் 2011: விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு


விழுப்புரம்
 
          விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் பா.ம.க., சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 7ம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம். 
 
இது குறித்து மாநில துணை பொதுச்செயலாளர் செந்தமிழ்ச்செல்வன் விடுத்துள்ள அறிக்கை: 
 
              விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் பா.ம. க.,வினரிடம் 7ம் தேதி முதல் மனுக்கள் பெறப்படுகின்றன. 
 
விழுப்புரம், விக்கிரவாண்டி தொகுதியை சேர்ந்தவர்கள் 7 மற்றும் 8ம் தேதிகளில் விழுப்புரத்தில் உள்ள கட்சி அலுவலகத்திலும், 
 
திண்டிவனம், வானூர் தொகுதியை சேர்ந்தவர்கள் 9 மற்றும் 10ம் தேதி திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில் மனு அளிக்கலாம். 
 
மயிலம், செஞ்சி தொகுதியை சேர்ந்தவர்கள் 11, 12ம் தேதி செஞ்சியில் உள்ள அலுவலகத்தில் மனு அளிக்கலாம். 
 
கட்டண விபரம்:
பேரூராட்சி தலைவர் பதவிக்கு 2,000 ரூபாய், 
உறுப்பினர் பதவிக்கு 500 ரூபாய், 
நகராட்சி தலைவர் பதவிக்கு 3,000 ரூபாய், 
உறுப்பினர் பதவிக்கு 1,000 ரூபாய், 
ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 1,000 ரூபாய், 
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 3,000 ரூபாய் செலுத்த வேண்டும். 
 
பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் பாதிக்கட்டணம் செலுத்த வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் 2011: சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு பா.ம.க. சார்பில் ஏ.கே. மூர்த்தி விருப்ப மனு


 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/54a95bee-e82d-4d8f-840e-816ec042536b_S_secvpf.gif
 
 
சென்னை

          சென்னை மாநகராட்சி தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இன்றும், நாளையும் விருப்ப மனு பெறப்படுகிறது.  

           மேயர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் மத்திய 
  அமைச்சர் ஏ.கே. மூர்த்தி பா.ம.க. தலைவர் ஜி.கே. மணியிடம் விருப்ப மனு கொடுத்தார்.  கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட முத்துக்குமார், டி.கே. சேகர், சைதை சிவா, சுரேஷ்குமார், கிருஷ்ண மூர்த்தி, ஜமுனா கேசவன், தாமோதரன், பிரேமா சக்கரபாணி, கிண்டி வேணு உள்பட பலர் மனு கொடுத்தனர்.

விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து ஜி.கே. மணி கூறியது:-  


           மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. மேயர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து ஏ.கே. மூர்த்தி மனு தந்துள்ளார். அவர் சிறந்த மக்கள் சேவையாளர். மேயர் வேட்பாளர் யார் என்பதை கட்சி மேலிடம் ஆய்வு செய்து அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் மத்திய அமைச்சர்  ஏ.கே. மூர்த்தி  கூறியது
 
            அனைத்து வார்டுகளிலும் பா.ம.க. போட்டியிடும். நாங்கள் வெற்றி பெற்றால் சென்னை மாநகராட்சியை முன் மாதிரி மாநகராட்சியாக மாற்றுவோம் என்றார்.