கம்பம்:
தேனி மாவட்டத்தில் பாமக சார்பில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள், செப்.7-ம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என, கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் பொன். காட்சிகண்ணன் தெரிவித்துள்ளார்.
பாமக சார்பில், தேனி அன்னலட்சுமி ஹோட்டலில் செப். 7-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை, மாநிலத் துணைப் பொதுச் செயலர் பொன். காட்சிகண்ணன் தலைமையில், மாநில மகளிர் அணிச் செயலர் கலைமதி குணசேகரன் முன்னிலையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் விருப்ப மனு பெறப்படும். போட்டியிட விருப்பமுள்ள கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சி நிர்ணயக் கட்டணத்தை செலுத்தி, விருப்ப மனுவை அளிக்கலாம் என, கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலர் பொன். காட்சிகண்ணன் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக