திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பா.ம.க.வினர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பின்படி பா.ம.க. சார்பிலும் மனுக்கள் புதன்கிழமை முதல் வாங்கப்படுகின்றன. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ம.க. அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளரும், மாநில துணைப் பொதுச் செயலருமான கோ.எதிரொலிமணியன் விருப்ப மனுக்களை கட்சியினரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
மகளிரணி நிர்வாகி ஜோதி செல்வம், தலைவர் அ.முத்து, துணைச் செயலர் கே.அறவாழி, ஒன்றியத் தலைவர் லோ.சதாசிவம், துணைச் செயலர் என்.குப்புசாமி உள்பட பலர் மனு அளித்தனர். மாநில துணைத் தலைவர்கள் ம.சண்முகசுந்தரம், இரா.காளிதாஸ், செயலர்கள் இரா.ஜானகிராமன், இல.பாண்டியன், தலைவர் இரா.ஏழுமலை, நகர செயலர் மு.சண்முகம் உள்பட பலர் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக