காஞ்சிபுரத்தில் பா.ம.க.சுவர் விளம்பரம் மீது அ.தி.மு.க சுவரொட்டிகள்: மாவட்டச் செயலர் சங்கர் தலைமையில் சாலை மறியல்

காஞ்சிபுரம் : 

          சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பா.ம.க.,வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. 

          காஞ்சிபுரத்திலிருந்து பரந்தூர் செல்லும் சாலையில், காரை கிராமம் உள்ளது. இங்கு, சாலையோரம் தனியாருக்குச் சொந்தமான நிலத்தின் சுற்றுச் சுவரில், பா.ம.க.,வினர் சுவர் விளம்பரம் செய்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு, காரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஒன்றிய இணைச் செயலர் ராஜேஷ் சார்பில், அ.தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. பா.ம.க.,வின் சுவர் விளம்பரத்திலிருந்த ராமதாஸ், அன்புமணி ஆகியோரின் உருவப்படத்தின் மீதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. 

             இதையறிந்த பா.ம.க.,வினர், காரை கிராமத்தில் மாவட்டச் செயலர் சங்கர் தலைமையில் ஒன்று கூடினர். பகல் 12 மணிக்கு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சாலை மறியல் செய்ய ஊர்வலமாகச் சென்றனர். பின் தேசிய நெடுஞ்சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த காஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடம் சென்று போஸ்டர் ஒட்டியவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர்.



0 கருத்துகள்: