நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 7 ம் தேதி முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணிவெளியிட்ட அறிக்கை:
உள்ளாட்சித் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து 7 ம் தேதி முதல் 12 ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புவோரிடமிருந்து வரும் 4ம் தேதி காலை விருப்ப மனுக்கள் பெறப்படும் என ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
1 கருத்துகள்:
சத்ரிய வம்சம் (பாமக) ஆட்சி செய்ய வேண்டும் என்பது ஆண்டவன் கட்டளை. அதனால்தான் தமிழ்நாட்டின் தனிப்பெரும் சமுதாயமாக வன்னியர்களை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் 500 க்கு மேற்பட்ட ஜாதிகள் இருந்தாலும்,சத்ரிய வம்சத்தை மட்டும் பெரும்பான்மையாக படைத்துள்ளது. உயர உயர பறந்தாலும் காக்கை பருந்து ஆக முடியாது. பூனை புலியாக முடியாது. அதுபோல சமுதாயத்தை காப்பதும், ஆட்சி செய்வதும் சத்ரிய வம்சமாகத்தான் இருக்கணும். ஒரு ஆட்சி எப்படி இருக்க வேண்டும், அதை எப்படி சரியான பாதையில் செயல்படுத்த வேண்டும், மக்கள் பிரச்சினையை எப்படி தீர்க்க முடியும் என்பதை சத்ரிய வம்சத்தில் பிறந்தவர்க்குத்தான் நன்றாக தெரியும். எனவே மற்றவர்கள் பாமகவை பார்த்து பொறாமை படுவதில் அர்த்தம் இல்லை. இது ஆண்டவன் கட்டளை. பாமக ஆட்சிக்கு வரவேண்டும் என்று இன்று பல அமைப்புகள் விரும்புகின்றன.1 . மது, போதை பொருள் ஒழிப்பு, சினிமா ஆபாசம் போன்றவற்றை ஒழிக்க பாமக குரல் கொடுக்கிறது. இதனால் பெண்கள் அமைப்பு பாமகவை விரும்புகிறது 2 . தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது பாமக. மேலும் கல்லூரி நுழைவுத்தேர்வை ஒழிக்க பாமக பாடுபட்டது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள் பாமகவை விரும்புகிறார்கள். 3 . விவசாயிகளின் வாழ்வாதாரதிர்க்கும், வளர்ச்சிக்கும் பாமக உரிமைக்குரல் கொடுத்தது. இதனால் அனைத்து அனைத்து விவசாய அமைப்புகள் பாமகவை விருபுகிறது. 4. மணல் கொள்ளை, கட்டுமான பொருள் விலை உயர்வுக்கு பாமக குரல் கொடுத்தது. இதனால் கட்டுமான அமைப்புகள் பாமகவை விரும்புகிறது. 5 . அரசு காலி பணியிடங்களை நிரப்பவும், தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு கொண்டு வர பாமக குரல் கொடுத்தது. இதனால் வேலை தேடும் இளைஞர்கள் பாமகவை விரும்புகிறார்கள். 6 . ஈழ தமிழர்களின் உரிமைக்கு பாமக குரல் கொடுத்தது. இதனால் தமிழ் உணர்வாளர்கள் பாமகவை விரும்புகிறார்கள். 7. தமிழக அரசிடம் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி , பாமக பலமுறை குரல் கொடுத்தது. இதனால் அனைத்து கிராமப்புற மக்களும் பாமகவை விரும்புகிறார்கள் 8. அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் முன்னேற்றத்திற்காக பாமக உரிமை குரல் கொடுத்தது. இதனால் அவர்கள்
பாமகவை விரும்புகிறார்கள். 9. கல்வி, வேலைவாய்ப்பு, தரமான சுகாதாரம் , விவசாய வளர்ச்சி போன்ற முக்கியமான மக்கள் நல திட்டங்கள் நிறைவேற்ற பாமக போராடியது. இதனால் அனைத்து தமிழ்நாட்டு மக்களும் பாமகவை விரும்புகிறார்கள். 10. பாமகவை போல் உயர்ந்த கொள்கைகள், மக்கள் நல செயல் திட்டங்கள், தொலை நோக்கு பார்வைகள் மற்ற கட்சியில் இல்லை. இதனால் அனைத்து படித்த, பண்பாளர்கள், நடுநிலையாளர்கள் பாமகவை விரும்புகிறார்கள். இதுபோல பல அமைப்புகள் பாமகவை விரும்புகிறார்கள். எனவே ஊழல் மற்றும் தான்தோன்றி திராவிட கட்சிகளை ஒழித்து, பாமக தலைமையில் பாமக+விடுதலைசிறுத்தைகள்+மதிமுக+பாரதியஜனதா+கொங்குநாடு முன்னேற்ற கழகம் இணைந்து சமுதாய மறுமலர்ச்சி கூட்டணி ஏற்பட்டால் இது வெற்றி கூட்டணியாக இருக்கும்.
கருத்துரையிடுக