சென்னை:
சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் பா.ம.க. வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி போட்டியிடுகிறார். இவர் நேற்று முதல் பிரசாரத்தை தொடங்கினார். அண்ணாநகரில் நடந்த 67 கவுன்சிலர் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் ஏ.கே.மூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.
இன்று ஆலந்தூர், சோழிங்க நல்லூர், சைதாப்பேட்டை, தி.நகர், விருகம்பாக்கம் உள்பட 69 கவுன்சிலர் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் வேளச்சேரியில் நடந்தது. அதன் பிறகு ஏ.கே.மூர்த்தி வேளச்சேரியில் பிரசாரத்தை தொடங்கினார். ஒவ்வொரு பகுதியாக சென்று ஆதரவு திரட்டினார்.

நிகழ்ச்சியில் மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் எம்.எல். ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம், மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், மாவட்ட செயலாளர் கன்னியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாலை திருவொற்றியூர், பெரம்பூர், ஆர்.கே.நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம், எழும்பூர் உள்பட 67 கவுன்சிலர் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ராயபுரத்தில் நடக்கிறது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக