கடலூர் தெற்கு மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம் நிதி அறிவிப்பு

சிதம்பரம்:

            கடலூர் தெற்கு மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கான நிதியளிப்பு விழா சிதம்பரத்தை அடுத்த சிலம்பிமங்கலம் சிவகோபாலன் திருமண மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

             பாமக மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் வேணு.புவனேஸ்வரன் தலைமை வகித்தார். வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் செல்வ.மகேஷ் வரவேற்றார். சிதம்பரம் நகரச் செயலர் முத்து.குமார் முன்னிலை வகித்தார். விழாவில் மாநில வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு எம்எல்ஏ சிறப்புரையாற்றினார். வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம் நிதி, மாநிலத் தலைவர் ஜெ.குருவிடம் வழங்கப்பட்டது.

            இந்த நிகழ்ச்சியில் மாநில துணைப் பொதுச்செயலாளர் பா.சண்முகம், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் கி.தேவதாஸ் படையாண்டவர், மாநில துணைத்தலைவர் ரா.செல்வகுமார், இ.கே.பி.மணிகண்டன், செ.வெற்றிவேல், எஸ்.ஆர்.நாகவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்: