மேட்டூரில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

மேட்டூர்:

           ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யகோரி மேட்டூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்பாட்டம் செய்தனர்.

           திங்கட்கிழமை காலை மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்திற்கு கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மே.சி.ராஜா தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர். அறிவழகன், பேரூராட்சி தலைவர்கள் வ.மயில்சாமி, தமிழ்வாணன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். சுமார் 30 நிமிட நேரம் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

0 கருத்துகள்: