சேலம்:
ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 3 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி பாமக சார்பில் சேலத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார்.
போராட்டத்தில் தலைவர் ஜி.கே.மணி பேசும்போது,
3 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள், கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பல்வேறு அமைப்புகள், மாணவர்கள், வழக்குரைஞர்கள் என பலதரப்பட்டவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மூவருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை உயர் நீதிமன்றம் 8 வாரத்துக்கு தடை செய்துள்ளது. இதன் பிறகு என்ன ஆகும் என்று தெரியவில்லை. ஒருவேளை மீண்டும் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டால் அதை எதிர்த்து மீண்டும் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.
இதற்கிடையே வரும் 14-ம் தேதி திருச்சியில் தமிழ் அமைப்புகளின் சார்பில் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி மாநாடு நடத்த உள்ளோம். இதில் ராமதாஸ் கலந்து கொள்ள உள்ளனர் என்றார். போராட்டத்தில் மூவரின் தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக