அறந்தாங்கி:
ராஜீவ் காந்தி கொலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் தண்டனையை குறைக்க வலியுறுத்தி, அறந்தாங்கி பேருந்து நிலையம் எதிரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் முன்னாள் மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் அ. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில மகளிர் அணி துணைச் செயலர் சுப. சீத்தாலட்சுமி, அறந்தாங்கி ஒன்றியத் தலைவர் இல. ராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலர் சுப. அருள்மணி ஆர்ப்பாட்டத்தை தொடக்கிவைத்துப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பாமக செயலர் அரங்க. செல்லையா, மாவட்டத் துணைச் செயலர் ஜீவானந்தம், மகளிரணி பொருளாளர் காசி. சுந்தராம்பாள், திருவரங்குளம் ஒன்றியச் செயலர் ரவி, பசுமைத் தாயகம் தங்க. கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, அறந்தாங்கி ஒன்றியச் செயலர் ராம. துரைராசன் வரவேற்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக