கோவில்பட்டியில் பரமக்குடி துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசாரை கண்டித்து பாமக.சார்பில்ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டி : 

            கோவில்பட்டியில் பரமக்குடி துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசாரை கண்டித்து  ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டி ஒன்றிய பாமக.,சார்பில் பரமக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. 

            கோவில்பட்டி தாலுகா அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாமக.,மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கதிருப்பதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பியதுடன், சம்பவத்தை கண்டித்து பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் கனகராசு, நகர தலைவர் மாரிமுத்து, மாநில கொள்கை விளக்க அணி தலைவர் வியனரசு, மாநில பேச்சாளர் மாரியப்பன், கழுகுமலை நகர செயலாளர் ஆதிநாராயணசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


0 கருத்துகள்: