அரியலூரில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர்:

            முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கும் தண்டனையைக் குறைக்கக் கோரி, பாட்டாளி மக்கள் கட்சியினர் அரியலூரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

             அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலர் வைத்தி தலைமை வகித்தார். கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலர் பாலு முன்னிலை வகித்து, ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார்.   ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலர் செந்தில்குமார், வேப்பூர் ஒன்றியக் குழுத் தலைவர் நீலமேகம், கட்சி நிர்வாகிகள் கோபி, சாமிதுரை, கண்ணன், அனுப்பூர் ராஜேந்திரன், ரவிசங்கர், கண்ணபிரான், செல்வகடுங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்: