மதுராந்தகம்:
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பாமக சார்பில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மதுராந்தகம் தாலூகா அலுவலகம் முன்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
பஸ் நிலையம் எதிரில் இருந்து புறப்பட்ட கண்டன ஊர்வலம் நகர முக்கிய வீதிகளின் வழியாக தாலூகா அலுவலகத்தை அடைந்தது.÷அதன் பின்னர் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலர் கி.குமரவேல் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் கோபாலக்கண்ணன் முன்னிலை வகித்தார். நகரச் செயலர் ந.ராசா வரவேற்றார். மாநில பொதுச் செயலர் பொன்.கங்காதரன் சிறப்புரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் குணசேகரன், ஏழுமலை, பாரதிதாசன், ஒன்றியச் செயலர்கள் பாபு, ராஜேந்திரன், சகாதேவன், சாந்தமூரத்தி உள்ளிட்ட பாமகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக