திண்டிவனத்தில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

திண்டிவனம்:

         திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாமக சார்பில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன  ஆர்ப்பாட்டம்  பாமக மாவட்டச் செயலர் மலர்சேகர் தலைமையில் நடைபெற்றது.  

              நகரச் செயலர் ஜெயராஜ் வரவேற்புரை வழங்னார். மாநில துணைத் தலைவர் என்.எம்.கருணாநிதி, முன்னாள் மாவட்டச் செயலர்கள் ஏழுமலை, ஜெயகிருஷ்ணன் நகர மன்ற உறுப்பினர்கள் முரளிதாஸ், ஞானவேல், ராமன், வடபழனி, நகர அமைப்புச் செயலர் சௌந்தர், மாவட்டப் பொருளர் சந்தியா, மாவட்ட மகளிரணிச் செயலர் மகேஸ்வரி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்: