திருக்கோவிலூர்:
திருக்கோவிலூரில் பாமக சார்பில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, பாமக மாநில துணை பொதுச் செயலரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.எ.டி.கலிவரதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவர் அ.பா.செழியன், முன்னாள் மாவட்டத் தலைவர் சப்தகிரி, முன்னாள் ஒன்றியச் செயலர் ஜி.ஞானவேல், மாவட்ட மாணவர் சங்கச் செயலர் ஆர்.சுபாஷ், ஒன்றியச் செயலர் சுப்பிரமணியன் உள்பட சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக