நாகர்கோவில்:
நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பாமக சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைப் பொதுச்செயலர் ஹரிஹரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர்கள் ரவி, ரமேஷ், நாகர்கோவில் நகரச் செயலர் ராமதாஸ், மாவட்ட இளைஞரணிச் செயலர் ஜெபசிங்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜேஷ், சிவக்குமார், சாம், சுரேஷ், அர்ஜுனன், அர்ஷாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக