செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்துக்குட்பட்ட 12-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பா.ம.க. வேட்பாளர் கண்ணகி அ.தி.மு.க. வேட்பாளர் செல்வி, தி.மு.க. சார்பில் குழந்தை அம்மாள், உள்பட 5 பேர் போட்டியிட்டனர். நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய நேரத்தில் இருந்தே தி.மு.க., பா.ம.க.வுக்கும் இடையே இழுபறி நிலை உருவானது.
முடிவில் 2 கட்சிகளுமே சம ஓட்டுகள் பெற்றது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் 3847 ஆகும். இதில் பா.ம.க. 1310 வாக்குகளும், தி.மு.க. 1303 ஓட்டுகளும் பெற்றது. தபால் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டதில் பா.ம.க.வுக்கு 7 ஓட்டுகளும், தி.மு.க.வுக்கு 14 வாக்குகளும் கிடைத்ததால் சமநிலை ஏற்பட்டது. எனவே ஓட்டுகள் மீண்டும் எண்ணப்பட்டது. அப்போதும் 2 கட்சிகளும் சமநிலையில் இருந்தது. உடனே குலுக்கல் முறையில் தேர்வு நடந்தது. இதில் பா.ம.க. வேட்பாளர் கண்ணகி வெற்றி பெற்றார். மாவட்ட கவுன்சிலர் 1-வது வார்டு பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் குணசேகரன் தேர்வானார். 5-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு பா.ம.க. வேட்பாளர் தேன்மொழி வெற்றி பெற்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக