ராமதாசு முன்னிலையில் பாமகவில் இணைந்த பல்வேறு கட்சியினர்


திண்டிவனம்:

         திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் திங்கள்கிழமை தேமுதிக உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பாமக நிறுவனர் ராமதாசு முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.

           மயிலம் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட இளமங்களம் கிராமத்தைச் சேர்ந்த தேமுதிக இளைஞரணிச் செயலர் பரசுராமன், அவைத்தலைவர் பெரியண்ணன், துணைச் செயலர் தாமோதரன் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ராமதாசு முன்னிலையில் பாமக இணைந்தனர். அப்போது பாமக உறுப்பினர் அட்டையை ராமதாசுவிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியின் போது, மாவட்டச் செயலர் மணிமாறன் உடனிருந்தார். இதற்கான ஏற்பாட்டை மயிலம் வடக்கு ஒன்றியச் செயலர் வழக்கறிஞர் சம்பத் செய்திருந்தார்.   


0 கருத்துகள்: