பாமக புதியவர்களை கட்சியில் சேர்ப்பதில் அக்கறை காட்டிவருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்சியில் சேர்க்கப்பட்டுவருகிறார்கள். புதிதாக கட்சியில் சேருபவர்களுக்கு பா.ம.க.வின் கொள்கைகள், அரசியல் திட்டம், மக்கள் நலனுக்காக பாடுபடுவது போன்ற பல்வேறு அம்சங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இளைஞர்கள், இளம் பெண்களுக்கான பயிற்சி முகாம் இன்று நடத்தப்பட்டது. இந்த முகாம் கட்சி நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. காலையில் தீவட்டிபட்டியில் பயிற்சி முகாம் நடைபெற்றது. மாலையில் ஓமலூரில் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
‘நீதிமன்ற தீர்ப்பு ஆணையத்தின் படி ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதற்கு 400 கோடி செலவாகும் என்று முதல்வர் கூறுகிறார். 4 ஆயிரம் கோடி செலவானாலும் பரவாயில்லை. இது அவசியமானது’’ என்று தெரிவித்தார். மேலும், ‘’1991க்கு பிறகு வந்த தலைமுறை குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டது. இது தடுக்கப்படனும்’’ என்று தெரிவித்தார்.
எதிர்கட்சியினர் அதிகம் பேர் திமுகவில் இணைந்து வருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
‘’எதிர்கட்சியைச்சேர்ந்த உங்க(சேலம்)ளுக்கு பக்கத்து மாவட்டத்துக்காரர் மீது ஊழல் புகார் இருக்கிறது. ஆனால் அவர் திமுகவில் இணைந்து ராஜ்யசபா எம்.பி. ஆகிவிட்டார். இது வருந்தத்தக்க ஒன்று.
தமிழகத்தில் கொலைகள் அதிகரித்துவருகிறதே. சேலத்தில் நடந்த 6 கொலைகள் பற்றி அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சேலத்தில் நடந்த 6 கொலைகள் உட்பட தமிழகத்தில் நடந்துவரும் கொலைகள் பற்றிய விசாரணைகள் சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்றப்படவேண்டும். அப்போதுதான் உண்மையான விசாரணை நடைபெறும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக