
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நுகர்பொருள் வாணிபக் கழகத்தில், தூத்துக்குடி மண்டலத்தின் உதவி தரக்கட்டுப்பாடு அதிகாரியாக முருகன் பணியாற்றி வந்தார். ரேஷன் பொருள் கடத்தல் தொடர்பாக அவர் காவல்துறையிலும் தனது உயர் அதிகாரிகளிடத்திலும் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தனது உயிருக்கு ஆபத்து வரலாம் என்று மனைவியிடம் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், அவர் கொலை செய்யப்பட்டு அதை தற்கொலை என்று மூடி மறைக்க முயற்சி நடப்பதாக அவரது மனைவி புகார் கூறியுள்ளார். மேலும், அவரது உடலில் ரத்தக் காயங்கள் இருந்தன என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, அதிகாரி முருகனின் மரணத்தில் எழுந்துள்ள சந்தேகம் குறித்து முழுமையாக விசாரணை நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இச்சம்பவம் குறித்து பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக