புதுச்சேரி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பாமக

              புதுச்சேரி அரசை கண்டித்து வரும் 22ஆம் தேதி காரைக்காலில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, அம்மாநில பாமக அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய புதுச்சேரி பாமக செயலாளர் அனந்தராமன்,

               காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் தேவமணி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை கண்டித்து வரும் 22ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இந்த ஆர்ப்பாட்டம் காரைக்கால் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும். பாமகவின் வளர்ச்சியை பிடிக்காத புதுச்சேரி அரசு திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கையாக தேவமணியை கைது செய்துள்ளது. தேவமணியை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவரை விடுவிக்கும் வரை பல கட்ட போராட்டங்களை நடத்த உள்ளோம் என்றார்.

0 கருத்துகள்: